தனது வேண்டுகோளை ஏற்று தண்ணீர் திறப்பு: கர்நாடக அமைச்சருக்கு விஷால் நன்றி

mgid start
 தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் என கூறிய கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர்எம்.பி.பாட்டீலுக்கு நடிகர் விஷால் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் பாட்டீலுக்கு  அவர் எழுதியுள்ள கடிதத்தில், அடுத்த 3 மாதங்களில் 94 டிஎம்சி நீர் தமிழகத்துக்கு திறக்கப்படும், நீர் திறந்துவிடுவது அவசியம் என அமைச்சர் கூறியதற்கு நன்றி. அமைச்சரின் செயல் அரசியலை தாண்டிய மனிதாபிமான செயல் என்றும் எனது வேண்டுகோளை ஏற்று தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டதற்கு தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவித்து கொள்வாதாக கடிதத்தில் விஷால் கூறியுள்ளார். முன்னதாக கர்நாடகாவில் நடந்த படவிழாவில் தமிழகத்துக்கு நீர் திறக்க விஷால் வேண்டுகோள் விடுத்திருந்தார்.