குற்றவாளிகளின் கொடூர கதைகள், பாகம் 1 : கொடூர டாக்டர்

mgid start
(நன்றி ஆசிரியர்: ரா.பிரபு)

வரலாற்றில் டிசைன் டிசைனாக சைக்கோக்கள் , சாடிஸ்ட்கள், கொடூரர்கள் இவர்களுக்கு பஞ்சம் இல்லை..
ஹிட்லர், செங்கிஸ்கான்,கலிகுலா, இவான், ஜாக் தி ரிப்பர் , டெட்பண்டி, சிக்காடிலோ, நீரோ, இப்படி அது பெரிய லிஸ்ட் (மேற்கண்டவர்கள் பற்றி நீங்கள் அனைவரும் போதும் போதும் என்கிற அளவு அறிவீர்கள் என்பதை நான் அறிவேன் எனவே அவர்களில் யாரை பற்றியும் நான் கட்டுரையில் சொல்ல போவதில்லை என்பதை இப்போதே சொல்லி விடுகிறேன் )
கொடூர கொலைகள் சித்தரவதைகள் செய்த பல பேர் தாங்கள் ஒரு குற்றவாளிகள் என்ற உணர்வே இல்லாமல் வாழ்ந்து இருக்கிறார்கள் என்பது தான் கொடுமை .
உதாரணமாக இன்று நாம் பார்க்க இருக்கும் கொடூர டாக்டர் Josef mengele யை சொல்லலாம்.

ஹிட்லரின் புகழ் பெற்ற சித்ரவதை கூடமான " Auschwitz concentration camp" இல் angel of death என்ற பெயரில் அறிய பட்ட ஒரு குரூர டாக்டர் இவன்.
ஹிட்லரின் புகழ் பெற்ற கொல்லும் தளமான கேஸ் சேம்பர் ஐ பற்றி கேள்வி பட்டிருப்பீர்கள் அல்லவா அங்கே இவர் தான் பொறுப்பதிகாரி.
அதாவது பொதுவாக யூத அடிமைகளை மற்றும் கைதிகளை கொத்து கொத்தாக பிடித்து வருவான் ஹிட்லர் அதில் அடிமை வேலைக்கு பணி ஆட்களாக தேர்ந்தெடுக்க உடல் ஆரோக்கியமும் பலமும் உள்ளவர்களை தனியாக பிரித்து கொள்வார்கள் . மொத்த கூட்டத்தில் கால் பங்கு ஆள் தான் அதில் வேலை க்கு தேறுவார்கள் மீதி முக்கால் பங்கு அதாவது பெண்கள்,குழந்தைகள்
ஊனமுற்றோர் , நோயாளிகள், நோஞ்சான்கள் இவர்கள் எல்லாம் தகுதி அற்றவர்கள்.
அவர்கள் உடனடியாக கேஸ் சேம்பர் க்கு அனுப்ப பட்டு விஷ வாயு செலுத்த பட்டு கொல்ல படுவார்கள்.
(அந்த தேர்ந்தெடுக்க பட்டவர்கள் தங்கள் சக்தி தீரும் வரை வேலையை தொடர்ச்சியாக செய்து கொண்டே இருந்து முடியாமல் கீழே விழும் போது சுட்டு கொல்ல படுவார்கள் என்பது வேறு விஷயம்)

அந்த கேஸ் சேம்பருக்கு யாரை அனுப்ப வேண்டும் ..யாரை அனுப்ப கூடாது என தகுதி பரிசீலித்து தேர்ந்தெடுக்கும் அதிகாரி தான் அந்த Josef mengele .
சுவற்றில் இரு 5 அடி உயரத்தில் கோடு கிழித்து விட்டு அந்த கோட்டில் தலை எட்டாத குழந்தைகள் நேரே கேஸ் செம்பருக்கு போங்க என்று அனுப்பி வைப்பது அவனுடைய இயல்பாக இருந்தது.
வீட்டில் ரேடியோ போன்ற பொருட்கள் கெட்டு போனால் இனி உதவாது என்று தூக்கி போட்டால் சிறுவர்கள் அதை தங்கள் ஆராய்ச்சிக்கு எடுத்து கொண்டு நோண்டுவதை பார்த்து இருக்கிறீர்களா. அப்படி அங்கே சாகடிக்க தேர்ந்தெடுத்தவர்களை சாகடிக்கும் முன் தனது ஆய்வுக்கு ஆராய்ச்சிக்கு பயன் படுத்துவான் ஜோசப்.
இடையில் அவர்கள் இறந்தால் தூக்கி வீசி விடுவான்.
அந்த ஆய்வுகள் எல்லாமே கொடூரமானவை கொஞ்சமும் மனித தனம் அற்றவை.
ஒரு முறை தனது 11 வயது குழந்தையை பிரிய மாட்டேன் என்று ஆடம் பிடித்தாள் ஒரு தாய் அந்த தாய் மகள் இருவரையும் ஈவு இரக்கம் இல்லாமல் உடனே சுட்டு கொன்றான் ஜோசப்.
ஒரு முறை கும்பலில் நோய் தொற்று இருக்கும் என சந்தேகிதான் எனவே உடனே 600 பேரை ஒரே முறை கேஸ் சேம்பர் அனுப்பி கொன்றான்.
இந்த மேலே சொன்ன இரண்டு சம்பவங்கள் தான் அநேகமாக அவனிடம் சொல்ல முடிய கூடிய மிக குறைந்த குரூர சம்பவம் .
மற்ற படி அவன் செய்தது எல்லாமே எக்ஸ்ட்ரிம்.
பொதுவாகவே மனித உயிர் அவனுக்கு எந்த அளவிலும் ஒரு பொருட்டே இல்லை. உயிரை எடுப்பது அவனுக்கு காபி சாப்பிடுவதை விட மிக இயல்பான ஒன்று.
உதாரணத்திற்கு ஒரு சம்பவத்தை சொல்கிறேன்.
ஒரு முறை அவன் தனது நண்பர்களிடம் அமர்ந்து பேசி கொண்டிருக்கின்றான். அவர்களுக்குள் ஒரு வாக்குவாதம். அதாவது அவர்கள் பிடித்து வைத்திருக்கும் ஒரு சிறுவனுக்கு நுரையீரல் தொற்று இருக்கு என்றும் இல்லை என்றும் அவர்களுக்குள் கடும் வாக்குவாதம். இதில் அவனுக்கு நோய் தொற்று இல்லை என்பது ஜோசப் வாதம்.
ஒரு முடிவுக்கு வராத நீண்ட வாதமாக அது போனதால் . இடையில் எழுந்த ஜோசப் " எக்ஸ்கியூஸ் மீ கய்ஸ் பேசிட்டு இருங்க நான் இதோ வந்துட்றன்" என்று சொல்லி விட்டு சென்றான்.
பிறகு கொஞ்ச நேர இடைவெளிக்கு பின் வந்த ஜோசப் அவர்களிடம் " சாரி பிரண்ட்ஸ் நான் கூறிய கருத்து தவறு தான் ஒத்து கொள்கிறேன் அவனுக்கு நோய் தொற்று ஏதும் இல்லை "
என்றான்.
"இப்போ மட்டும் எப்படி ஒத்துகிறீங்க " என்று கேட்டதற்கு
"இப்ப தான் அவனை கொன்று அவன் நுரையீரலை அறுத்து பார்த்து பரிசோதித்து விட்டு வறேன் " என்றான்.

அடிமைகள் மேல் கொஞ்சமும் மனித தன்மை அற்ற பல சோதனைகளை செய்தான் ஜோசப் உதாரணமாக அவர்களை உயிரோடு மயக்க மருந்து ஏதும் கொடுக்காமல் வைத்து அவர்கள் உடலை அறுத்து அறுவை சிகிச்சை செய்வான். உடல் உறுப்புகளை வெட்டி எடுப்பான்.
கை கால் களை துண்டித்து கொஞ்ச கொஞ்சமாக அவர்களை சித்ரவதை செய்வான். தனது ஆய்வுக்கு எந்த வயதில் எந்த உயரத்தில் எந்த மாதிரி அடிமை தேவை என்பதை ஜோசப் ஆர்டர் செய்தானேயானால் அவன் அறுத்து மகிழ அதற்க்கு பொருத்தமான அடிமைகள் அவனுக்கு அனுப்பி வைக்க படும்.
அடிமைகளை தொடர்ச்சியாக ஆய்வுக்கு பயன் படுத்தி வந்தவன் குறிப்பாக குள்ளர்கள் மற்றும் உடல் ஊன முற்றவர்களை கொடூர ஆய்வுக்கு பயன் படுத்துவது அவனுக்கு பிடித்து இருந்தது.
கால போக்கில் அவன் டேஸ்ட் மாறி அவனை மிக கவர்ந்தது இரட்டை குழந்தைகள்.
பல பொம்மைகளை கொண்டு விளையாடும் குழந்தைக்கு பேவரட் பொம்மை ஒன்று இருக்கும் இல்லையா அப்படி ஜோசப்புக்கு இரட்டை குழந்தைகள்னா உயிர். அதாவது உயிரை எடுக்க உயிர். அவர்கள் உடலில் தனது மனதில் தோன்றிய அத்தனை குரூர பரிசோதனைகளையும் செய்து மகிழ்ந்தான்.
குறிப்பாக எல்லா குழந்தைகளுக்குமே அவர்களின் இமைகள் மற்றும் பிறப்புறுப்பை முதலில் துண்டித்து எரிந்து விடுவான்.
(அறுவைக்கு மயக்கம் மருந்து பயன் படுத்தும் பழக்கம் அவனுக்கு இல்லை.)

பிறகு அவர்களின் கண்ணில் ராசாயனங்களை பீச்சி கண்ணின் நிறம் மாறுகிறதா என சோதிப்பான்.
அவர்களின் கை கால் களை துண்டு துண்டாக வெட்டி விட்டு ட்ரீட்மெண்ட் மூலமாக மீண்டும் வளருகிறதா என்று சோதிப்பான்.
இரட்டை குழந்தைகளை ஆறாய்வதின் மூலம் பிற்காலத்தில் ஜெர்மன் மக்களை அதிக இரட்டை குழந்தைகள் பெற வைத்து ஜெர்மன் மக்கள் தொகையை விரைவாக பெருக்க முடியுமா என்று யோசித்தான்.
பொதுவாக இரட்டையர்களில் ஒருவர் இறந்து விட்டால் உடனே அடுத்த ஆளுக்கு இதயத்தில் குளோரோபாம் ஊசியை நேரடியாக ஏற்றி கொன்று விடுவான்.
பொதுவாக ஒருவர் உடலில் உள்ள ரத்தத்தை அடுத்தவர்கள் உடலில் மாற்றி மாற்றி ஏற்றி பரிசோதித்தான். அதில் பல குழந்தைகள் பிழைக்க வில்லை என்பதை கண்டான். ஒரு முறை ஒரு குழந்தை நோய் தொற்றில் இறந்து விட மொத்தம் 14 குழந்தைகளை இதயத்தில் குளோரோபாம் செலுத்தி கொன்றான். பிறகு விடிய விடிய 14 பேரையும் போஸ்டமாடம் செய்து எண்ணத்தையோ ஆராயுந்து கொண்டிருந்தான்.
ஆபரேஷன் செய்து ஆன் குழந்தையை பெண்ணாகவும் பெண் குழந்தையை ஆணாகவும் மாற்ற முடியுமா ? என்பதை அவன் அடிக்கடி பரிசோதித்து வந்தான்.
அங்கே அவனிடம் சிக்கி இறந்தது பல்லாயிர கணக்கான குழந்தைகளில் உயிர் தப்பியது மிக சிலரே அவர்கள் பிற்காலத்தில் வளர்ந்து பல கதைகளை சொன்னார்கள்.
குழந்தைகளுக்கு அவ்வபோது சுவீட் எல்லாம் வாங்கி வந்து கொடுப்பானாம் அந்த கொடூரன்.

ஒரு முறை அங்கே வேலை செய்த வேலை காரி தனது அனுபத்தை பகிர்ந்து கொண்டாள்.. அவள் சொன்ன அந்த ஒரு அனுபவம் போதும் கேம்பில் எந்த மாதிரி கொடூர சூழல் இருந்தது என்பதை உலகிற்கு காட்ட.
இவள் அங்கே வேலைக்கு சென்ற போது ஒரு நாள்...
ஒரு பெண்மணி நீண்ட நேரமாய் டாக்டர் காலில் விழுந்து எதுக்கோ கெஞ்சி கொண்டு இருந்தாளாம். அநேகமாய் உயிர் பிச்சையாய் இருக்கும் என்று அவள் நினைத்தாள்.
காரணம் நாம் தெருவில் நிற்கும் போது பிச்சைக்காரர்கள் பிச்சை கேட்டு நாம் கண்டுக்காமல் போவதை போல கேம்பில் உயிர் பிச்சை என்பது சாதாரணம்.
ஆனால் அவள் கேட்பதை கூர்ந்து கவனித்து கேட்ட பணி பெண் அதிர்ந்து இருக்கிறாள் .காரணம் அந்த தாய் கெஞ்சி கொண்டிருந்தது தனது குழந்தைகளை கொன்று விடுமாறு.
ஒரு தாயே தன் குழந்தையை கொல்ல ஏன் இப்படி கெஞ்சுகிறாள் என்று கவனித்த போது..
அவருடைய இரட்டை குழந்தைகள் இருவரையும் பிடித்து அவர்களை அறுவை மூலம் ஒட்டி பிறந்த இரட்டையாக மாற்ற முடியுமா என்று சோதிக்க அந்த டாக்டர் இருவர் முதுகு பகுதி சதைகளை பிய்த்து விட்டு இரண்டு முதுகையும் ஒன்றாக சேர்த்து வைத்து தைத்து இருந்தான்.

அக்குழந்தைகள் பல நாளாக சாப்பாடு தூக்கம் இல்லாமல் இரவு பகலாக நாள் முழுதும் தொடர்ச்சியான அழுது கொண்டே இருந்தன. அந்த தொடர் அழுகையை தாங்க முடியாமல் தான் அத்தாய் தனது குழந்தைகளை கொன்று விடுமாறு மன்றாடி கொண்டிருந்தாள்.
ஒரு தாயே தனது குழந்தையை கொல்லும் படி கெஞ்சி கேட்க வைத்த அந்த மனித பிறவிக்கு தகுதி அற்ற டாக்டரை யாரும் அவன் குற்றத்திற்கான தண்டனை கொடுக்க வில்லை.
போர் காலத்திற்கு ரஷ்யாவால் கைது செய்ய பட்டு அமெரிக்காவால் போர் குற்றவாளியாக எடுத்து செல்ல பட்டான் ஆனால் போர் குற்றவாளி லிஸ்ட் இல் இவன் பெயர் இல்லை. கையில் அவர்களின் குறிபிட்ட டாட்டூ இல்லை.
என்று விடுதலை செய்ய பட்டான்.

பிறகு தனது பெயரை "fritz ullman " என்று போலி ஆதாரங்கள் கொடுத்து தப்பி வந்தான்.
இடையில் லைசென்ஸ் இல்லாத நர்சிங் ஹாம் நடத்தி சட்ட விரோத கரு கலைப்பு செய்து பிடிபட்டான். (கைது பண்ண வேண்டிய விஷயத்துக்கு எல்லாம் விட்டுட்டு இதுக்கு கைதாகி இருக்கான் பாருங்க )அங்கே ஜட்ஜுக்கு கணிசமான தொகை லஞ்சம் கொடுத்து தப்பித்தான்.
பிறகு ஒரு நாள் 1979 இல் நீச்சல் அடித்து கொண்டிருந்த போது வலிப்பு வந்து செத்து போனான்.

தனது பணியை சிறப்பாக செய்ததற்கு பரிசு எல்லாம் வாங்கி இருக்கிறார். நம்ம டாக்டர்...
உலகில் இப்படி கௌரவிக்க பட்ட குற்றவாளிகள் எத்தனையோ ......
   
அந்த டாக்டரை நினைத்தால் அருவெறுபாக வெறுப்பாக இருக்கிறது அல்லவா.
உஷார்...அடுத்த பாகத்தில் நாம் பார்க்க இருக்கும் ஒரு குற்றவாளி..... இந்த டாக்டரை விட அதிக அறுவெறுப்பானவன்.
குற்றங்கள் தொடரும்....