எப்படி கொலை செய்யப்பட்டேன்? புனர்ஜென்ம மர்மம் விளக்கிய 3 வயது சிறுவன்!

mgid start
புனர் ஜென்மம் என சொல்லி முடிக்கும் முன்னரே, அதெல்லாம் பொய், புரட்டு, இந்த காலத்துல இதப்பத்தி எல்லாம் இன்னுமா பேசிட்டு சுத்திட்டு இருக்கீங்க.. என அடுத்த வார்த்தை பேச விடாமல் வாயை அடைக்கும் நபர்கள் நம்மை சுற்றி பலர் இருக்கிறார்கள். 

ஆனால், "நெஞ்சம் மறப்பதில்லை" காலத்தில் இருந்து இன்று வரை புனர் ஜென்மம் இருக்கிறது என்று நம்பும் மக்களும், அவர்களுக்கு சரிசமமாக நம்மை சுற்றி வாழ்ந்து கொண்டு தான் இருக்கிரார்கள். 

இது சிரியாவில் நடந்த ஒரு உண்மை சம்பவம். தான் எப்படி முந்தைய ஜென்மத்தில் கொலை செய்யப்பட்டேன் என மூன்று வயது சிறுவன் குற்றவாளியை கண்டுபிடித்த ஒரு சம்பவம்....

சிரியாவை சேர்ந்த சிறுவன்! 
கோலன் பகுதியை சேர்ந்த 3 வயது சிறுவன் தான் முந்தைய ஜென்மத்தில் எங்கே, எப்படி கொலை செய்யப்பட்டேன் என்ற மர்மத்தை விளக்கிய செயல் வரலாற்றில் இன்றும் ஆச்சரிய நிகழ்வாக திகழ்ந்து வருகிறது. 

மூன்று வருடத்திற்கு முன்பு நடந்த நிகழ்வு இது. தான் முந்தைய ஜென்மத்தில் கோடரிக் கொண்டு தலையில் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டேன் என அச்சிறுவன் கூறினான்.

சடங்கு! 
இச்சிறுவன் பிறந்த ட்ரூஸ் பாரம்பரிய இனத்தில் ஒருவரது மச்சம், அவரது முந்தைய ஜென்மத்தை பற்றி குறிப்பது என்ற நம்பிக்கை நிலவி வருகிறது. இச்சிறுவன் பேச துவங்கிய போது, அவன் தலையில் இருந்து பெரிய சிவப்பு நிற மச்சத்தை பற்றி அறிந்துக் கொள்ள கேட்டனர். 

அப்போது தான், நான் சென்ற ஜென்மத்தில் தலையில் கோடாரியால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டேன் என்ற அதிர்சிகரமான தகவலை கூறினான் எந்த சிறுவன்.

முந்தைய ஜென்மம்! 
அதிர்ந்து போன அச்சிறுவனின் பெற்றோர், இதை பற்றி அறிந்துக் கொள்ள, அவன் கூறிய தகவல்களை கொண்டு, அவன் முந்தைய ஜென்மத்தில் வாழ்ந்த இடத்தை அறிந்து அங்கே அழைத்து சென்றனர்.

புதைத்த இடம்! 
அங்கே இருந்த உள்ளூர் மக்கள், அந்த சிறுவன் கூறும் நபர், கடந்த நான்கு ஆண்டுகளாக காணாமல் போனதாக கூறினார். ஆனால், அந்த சிறுவன், தன்னை முந்தைய ஜென்மத்தில் கொன்ற அந்த நபரின் பெயர் உட்பட தெளிவாக கூறினான். 

ஊர் மக்கள் குழம்பி போக, அச்சிறுவன் கொலை செய்து புதைத்த இடத்திற்கு மக்களை அழைத்து சென்றான். அங்கே தோண்டி பார்த்த போது மண்டை பிளந்தபடியான எலும்பு கூட புதைந்து இருந்தது. 

மண்டையில் அடைப்பட்ட அதே இடத்தில் தான், இந்த சிறுவனுக்கு மச்சமும் இருந்தது. மேலும், சிறுவன் கூறியப்படியே கோடரி கொண்டு தான் கொலை செய்யப்பட்டுள்ளார் அந்த நபர் என்றும் அறிந்தனர்.

ஒப்புக் கொன்ட கொலையாளி! 
பிறகு, கொலை செய்த அந்த நபரும், தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். இந்த சிறுவனின் இந்த புனர் ஜென்ம நிகழ்வு குறித்து "Children Who Have Lived Before: Reincarnation Today" என ஜெர்மன் மருத்துவர் ட்ரூட்ஸ் ஹார்டோ என்பவர் புத்தகம் எழுதி, வெளியிட்டுள்ளார்.