ஹாலிவுட் படத்தில் நடிக்கும் ஓவியா..! இந்திய திரையுலகையே மிரள வைக்கும் சம்பளம்..!!

mgid start
நிகழ்ச்சி மூலம் புகழின் உச்சிக்கே சென்றிருப்பவர் நடிகை ஓவியா. இதன் மூலம் ஓவியா புரட்சி படை, ஓவியா ஆர்மி மற்றும் அகில இந்திய ஓவியா பேரவை தொடங்கும் அளவுக்கு சென்றுள்ளது. இந்த ரசிகர் வட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இது சக போட்டியாளர்களிடையே காதில் புகையை வரவழைக்கும் வகையில் உள்ளது. அது மட்டும் அல்லாமல் மற்ற நடிகைகளையும் பொறாமை கொள்ள செய்துள்ளது.

இந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்த ஒரு ஹாலிவுட் பட இயக்குனர் தனது படத்தில் நடிகை ஓவியாவை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளார். இதற்காக ஓவியாவின் மேனேஜரை அனுகிய இந்த இயக்குனர் விஜய் டிவியின் அனுமதியோடு ஒப்பந்ததத்தில் கையெழுத்து பெற்று சென்றுள்ளார்.

இதற்காக அவருக்கு இந்திய திரையுலகில் யாருக்கும் வழங்கப்படாத பெரும் தொகை சம்பளமா வழங்கப்பட உள்ளது. இந்த படத்தில் முதலில் தீபிகா படுகோனே நடிப்பதாக இருந்தது. தற்போது பிக்பாஸ் புகழால் ஓவியாவுக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. ஹாலிவுட் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்து உள்ளதால் ஓவியாவிற்கு கமல் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.