மருமகளை காப்பாற்ற மகனைக் கொன்ற அம்மா!!

mgid start
மருமகளை காப்பாற்றுவதற்காக, பெற்ற மகனை கழுத்தை நெறித்துக்கொன்ற அம்மாவை போலீசார் கைது செய்துள்ளனர்.
மும்பை மான்கூர்டு அம்பேத்கர் சாலில் வசித்து வருபவர் அன்வாரி (45). இவரது மகன் நதீம் (25). இவருக்கு குடி பழக்கம் உண்டு. திருமணம் செய்து வைத்தால் சரியாகிவிடுவான் என நினைத்து 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து வைத்தார் அம்மா அன்வாரி. திருமணத்திற்கு பிறகும் குடிப்பதை விடாத நதீம், மனைவியை அடித்து உதைத்து வந்துள்ளார். யாராவது தடுத்தால் அம்மாவாக இருந்தாலும் அவர்களையும் அடிப்பார். இதனால் கோபமடைந்த மனைவி பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். சமீபத்தில் அன்வாரி, மருமகளை சமாதானம் செய்துவீட்டிற்கு அழைத்து வந்தார்.
கடந்த செவ்வாய்க்கிழமை இரவு வழக்கம்போல நதீம் குடித்துவிட்டு வந்து மனைவியை தாக்கத் தொடங்கினார். வீட்டில் இருந்த அம்மா, மருமகளை பக்கத்துவீட்டிற்கு அனுப்பி வைத்தார். ஆத்திரமடைந்த நதீம், அம்மாவை சரமாரியாகத் தாக்கிவிட்டு, போதையில் தூங்கிவிட்டார். இனி இவன் திருந்தவே மாட்டான் என்று நினைத்து, மகனின் கழுத்தைத் துப்பாட்டாவால் நெரித்து கொன்றார் அம்மா. மறுநாள் அதிகாலை மருமகள் திரும்பி வந்து பார்த்தபோது நதீம் பிணமாக கிடந்தார். அன்வாரி கதறி அழுதபடி இருந்தார்.
போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் நதீமின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அன்வாரியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.