பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்கொலைக்கு முயன்ற: நடிகை ஓவியாவிற்கு போலீஸ் சம்மன்..!!

mgid start
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடிகை ஓவியா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார் என்ற தகவலின் அடிப்படையில் அவரிடம் காவல்துறை விசாரணை மேற்கொண்டது.

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை ஓவியா அண்மையில் அந்நிகழ்ச்சியில் இருந்து மருத்துவ காரணங்களுக்காக திடீரென வெளியேறினார்.

இதனை அடிப்படையாகக் கொண்டு சரவணன் என்பவர் சென்னை நசரேத்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

அந்த புகாரில், கடந்த ஆகஸ்ட் 4ம் தேதி குறிப்பிட்ட தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ஓவியா மன உளைச்சல் காரணமாக அங்கிருந்த நீச்சல் குளத்தில் குதித்து தற்கொலைக்கு முயன்றார் எனவும், அவரின் இந்த தற்கொலை முயற்சியை குறிப்பிட்ட தனியார் தொலைக்காட்சி டிஆர்பி ரேட்டிங்கை அதிகப்படுத்தும் நோக்கில் ஒளிபரப்பியது என்றும் கூறப்பட்டிருந்தது. இது தொடர்பாக நடிகை ஓவியாவிடம் விசாரணை நடத்தப்படவேண்டும் எனவும் அப்புகாரில் கூறியிருந்தார்.

இது தொடர்பாக நடிகை ஓவியாவின் தனிச் செயலரிடம் நசரேத்பேட்டை காவல்துறையினர் தொடர்பு கொண்டு கேட்ட போது அதனை அவர் மறுத்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.