பிக்பாஸ் வீட்டில் காதலில் விழுந்த காயத்ரி..! தன்னை அறியாமல் உளறி மாட்டி கொண்டார்...!!

mgid start
பிக்பாஸ் வீட்டில் காதலில் விழுந்த காயத்ரி..! தன்னை அறியாமல் உளறி மாட்டி கொண்டார்...!!
பிக்பாஸ் வீட்டில் ஒரு பிரச்சனை என்றால் அதற்கு காரணமாகவோ அல்லது பின்னணியிலோ காயத்ரி இருப்பார் என்பது இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து கொண்டிருப்பவர்களுக்கு தெரியும். ஆனால் சக்தி வெளியேறியதில் இருந்தே அவர் சண்டையை தவிர்த்து வருகிறார்.
அதுமட்டுமின்றி நேற்றைய நிகழ்ச்சியில் ஆரவ், சினேகன் குறித்து கோபமாக பேசியபோது அவரை சமாதானப்படுத்தவும் செய்தார். காயத்ரியின் கேரக்டர் இது இல்லையே என்று பார்வையாளர்கள் தான் குழப்பம் அடைகின்றனர்.
இந்த நிலையில் காயத்ரியின் இந்த புதிய மாற்றத்திற்கு அவருடைய காதல் தான் காரணமாக இருக்குமோ என்று தெரியவருகிறது. நேற்றைய நிகழ்ச்சியில் ‘சக்தியோட சேர்த்து என்னையும் அனுப்பியிருக்கலாம். இனி இங்கே என்னால் தங்க முடியாது. மத்தவங்க லவ் ஸ்டோரிய கேட்கறதுக்கு பதில் ‘என் லவ் ஸ்டோரியைப் பார்க்கப் போகலாம்’ என்று காயத்ரி புலம்பியது அவரது புதிய காதலை ஊர்ஜிதம் செய்கிறது.
இந்த வாரம் என்னை அனுப்பிடுங்க, இல்லைன்னா அழுதுருவே என்று காயத்ரி கூறியதில் இருந்தே இனிமேலும் காதலனை அவர் பிரிந்திருக்க முடியாதோ என்ற அர்த்ததில் எடுத்து கொள்ள தோணுகிறது. மேலும் சக்தி வெளியேறிய பின்னர்தான் காயத்ரிக்கு தனது காதலின் பிரிவு குறித்த வருத்தம் ஏற்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.