பிக்பாசில் நுழைந்த சுஜா வருணி யார்? இவர் பிக்பாசில் நுழைந்தது எப்படி?

mgid start

பிக்பாசில் நுழைந்த சுஜா வருணி யார் Who Is This Suja Varunee? இவர் பிக்பாசில் நுழைந்தது எப்படி?

பிக்பாசில் புதிய வரவாக கல்யாணம் முதல் காதல் வரை நாயகி பிரியா உள்பட யார் யாரோ வருவார்கள் என்று கூறப்பட்டது.
மேலும் ஓவியா மற்றும் பரணி ஆகிய இருவரும் வருகிறார்கள் என்று கூறப்பட்டது. ஆனால் திடீர் திருப்பமாக நடிகை சுஜா வருணி நுழைந்துள்ளார்.
இவர் 8ம் வகுப்பு படிக்கும்போதே +2 என்ற படத்தில் அறிமுகமானார். இந்த படம் 3 வருடம் கழித்தே ரிலீஸ் ஆனது.
அதன்பிறகு அவருக்கு சினிமா வாய்ப்புகள் வரவில்லை. நீண்ட இடைவெளிக்கு பிறகு இவர் வர்ணஜாலம் படத்தில் ஐட்டம் டான்ஸ் ஆடினார்.
இதனையடுத்து பல படங்களில் குத்து டான்ஸ் ஆடும் வாய்ப்புகளே வந்தது. இப்படி குத்து பாடல்களுக்கு ஆடிக்கொண்டிருந்தவருக்கு ஒரு படத்தில் கேரக்டர் ரோல் பண்ணும் வாய்ப்பு கிடைத்தது.
இதனையடுத்து கேரக்டர் ரோல் மட்டுமே பண்ணுவது என்ற முடிவுக்கு வந்து விட்டார். சமீபத்தில் இவர் நடித்த மிகப்பெரிய வெற்றிப்படம் குற்றம் 23.
இந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஒவ்வொருவராக தொடர்பு கொண்டு வந்தார்கள்.
அதில் சுஜா வருணியும் ஒருவர். இந்த வாய்ப்பை கெட்டியாக பிடித்து கொண்டார். இதில் கலந்து கொண்டு ஓவியாவை போல மிகப்பெரிய ரசிகர் வட்டத்தை பெற வேண்டும் என்பதே இவரது விருப்பமாகும்.