இதில் கொடுமை என்னவென்றால் சண்டிகார் கல்வித்துறையே இதை நம்பியுள்ளது.!

mgid start
சுந்தர் பிச்சைக்கு அடுத்தபடியாக ஒட்டுமொத்த இந்தியாவே ஒரு இந்தியனை பார்த்து பெருமைகொண்ட செய்தி தான் - சண்டிகரில் அரசு பள்ளியில் படிக்கும் ஒரு திறமையான மாணவனுக்கு கூகுள் நிறுவனத்தில் வேலை கிடைத்துள்ளது, மேலும் அச்சிறுவனுக்கு வருடம் 1.44 கோடி சம்பளம் வழங்கப்போவதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது என்ற செய்தி - இது முழுக்க முழுக்க போலியான தகவல் என்று தற்போது அம்பலமாகியுள்ளது. 

சண்டிகரில் அரசு பள்ளியில் படிக்கும் 16 வயது மாணவனான ஹர்ஷித் ஷர்மா சிறுவயது முதல் கிராபிக் டிசைனராக வேண்டும் என விருப்பம் கொண்டிருந்தாகவும், அதனால் கிராபிக் டிசைன் பயிற்சி மேற்க்கொண்ட ஹர்ஷித் ஷர்மா பாலிவுட் திரைப்படங்களுக்கு போஸ்டர்களை உருவாக்கியதாகவும், தனுது அருமையான போஸ்டர்களை கூகுள் நிறுவனத்திற்க்கு அனுப்பிவைத்ததின் விளைவாக ஷர்மாவின் நேர்த்தியான வடிவமைப்பு கண்டு கூகுள் நிறுவனம் தனத நிறுவனத்தில் பணிக்கு வருமாறு ஷர்மாவிற்கு அழைப்பு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் செய்திகள் ஆன்லைனை புயல் போல தாக்கினர்.

ஆனால், இதில் எதுவுமே உண்மையில்லை. அப்போது இந்த கட்டுக்கதையின் உண்மை பின்னணி என்ன.?

கூகுள் ஐகான் டிசைனர் பணி 
ஜூலை 29-ஆம் தேதியன்று, அரசு இரண்டாம்நிலை பள்ளியான ஜஎம்எஸ்எஸ்எஸ்-33 (GMSSS-33) வெளியிட்ட ஒரு செய்தி அறிக்கையில், பள்ளியின் மாணவர்களில் ஒருவரான ஹர்ஷித் ஷர்மா, கூகுள் ஐகான் டிசைனர் பணிக்காக, மாதத்திற்கு ரூ.12 லட்சம் சம்பளத்துடன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது ஒரு தேசிய சாதனை என்று கூறியிருந்தது.

பயிற்சி முடிந்தபிறகு 

ஆரம்பத்தில் கூகுள் நிறுவனத்தின் சிறப்புத் திட்டத்தின் கீழ், ஷர்மா ஒரு வருடத்திற்கு பயிற்சியளிக்கப்படுவார். இந்த காலகட்டத்தில், அவர் ஒரு மாதத்திற்கு ரூ.4 லட்சம் சம்பளம் பெறுவார். பயிற்சி முடிந்தபிறகு, அவர் மாதத்திற்கு ரூ.12 லட்சம் சம்பளம் பெறுவார். வருகிற ஆகஸ்ட் நடுப்பகுதியில் ஷர்மா கூகுள் நிறுவனத்தில் பணியில் அமர்வார் என்றும் பள்ளி வெளியிட்ட அறிக்கை விவரித்தது.

கூகுள் இந்தியாவிடம் கேட்டபோது 
இந்த அறிக்கை செய்தி ஊடகத்திடம் வழங்கப்பட இந்த செய்தி காட்டுத்தீ போல இந்தியா முழுவதும் பரவியது. இது சார்ந்த இதர விவரங்களை கூகுள் இந்தியாவிடம் கேட்டபோது "தற்போதைக்கு, ஹர்ஷித்ஷர்மா என்பவருக்கு கூகுளில் வேலை என்பது சார்ந்த பதிவுகள் இருப்பதாக எங்களுக்குத் தெரியவில்லை" என்று கூறி இந்த தகவல் போலியானது என்பதை போட்டு உடைத்தது.

சண்டிகர் கல்வித்துறை 
இதில் மிகப்பெரிய கொடுமை என்னவெனில், இந்த கூகுள் வேலை வாய்ப்பு தகவலை அறிந்த சண்டிகர் கல்வித்துறை ஷர்மாவிற்கும், அவன் பயிலும் அரசு பாடசாலைக்கும் பாராட்டுக்களைதெரிவித்தது என்பது தான்.

விசாரணை 
இத்தகைய பணியமர்த்தல் தொடர்பாக கூகுள் நிறுவனத்திடம் இருந்து எந்த உறுதியான பதிலும் இல்லை என்ற தகவல் வெளியானதைத் தொடர்ந்து, கல்வித் துறை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையை விசாரணை செய்யுமாறு சண்டிகர் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

தொலைபேசியில் தொடர்புகொண்ட போது 
இது சார்ந்த மேலும் பல விவரங்களை அணுக ஹர்ஷத் ஷர்மாவை தொலைபேசியில் தொடர்புகொண்ட போது இந்த தகவலை அவர் அடியோடு மறுத்துள்ளார் என்று கூறப்படுகிறது. அவர் எண்ணிற்கு மீண்டும் அழைத்தபோது, அதை அணுக முடியாமல் போனது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.