’நோ ஓவியா, நோ பிக்பாஸ்’ ட்ரெண்டாகும் ஹேஷ்டாக்

mgid start
தற்போது இணையத்தில் ஹாட் டாப்பிக்காக உலாவரும் ஓவியா பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி விட்டதாக தகவல் வெளியானது. இதை தொடர்ந்து ஓவியாவின் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் ஓவியா இல்லையென்றால், பிக்பாஸ் இல்லை #NoOviya NoBiggboss என்ற ஹாஷ்டாக்கை டிரெண்டாக்கி வருகின்றனர். 


சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக்ட்விட்டர்வாட்ஸ்அப் ஆகியவற்றில் ஓவியாஆர்மிசேவ் ஓவியாஓவியா புரட்சிப் படைஓவியா பேரவை என்று எண்ணற்ற ஃபேஸ்புக் பக்கங்கள், ட்விட்டர்அக்கவுன்ட்கள், வாட்ஸ்அப் குரூப்கள் உருவாகி ஓவியாவை புகழ்ந்து வந்தனர். நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள மற்றவர்களால் பலமுறை ஓவியா வெளியேறும் சூழல் ஏற்பட்ட போதும், நேயர்களின் வாக்குகளை அதிக அளவில் பெற்று ஓவியா நிகழ்ச்சியில் தொடர்ந்து இடம்பிடித்தார். 


இந்நிலையில் தற்போது ஓவியா பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி விட்டதாக தகவல் வெளியானது. இதனால் கவலை அடைந்த ஓவியா ரசிகர்கள் ட்விட்டரில் NoOviyaNo Biggboss, OviyaForEver, BanBiggBoss என பல ஹாஷ்டாக்குடன் தங்களது வருத்தங்களை பதிவு செய்து வருகின்றனர். ஓவியா இல்லையென்றால், பிக்பாஸ் இல்லை, ஓவியா எப்போதும் வேண்டும், ஓவியா வெளியேறிவிட்டால் பிக் பாஸ் பார்க்க மாட்டோம் என்றெல்லாம் பதிவு செய்து வருகின்றனர்.