மருத்துவமனை மீது படையெடுக்கும் ஓவியா ஆர்மி… திகைப்பில் மருத்துவர்கள் !!

mgid start
நடிகை ஓவியா சென்னை தி.நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பரவிய தகவலை தொடர்ந்து ஓவியா ரசிகர்கள் அந்த மருத்துவமனைக்கு தொடர்ந்து போன் செய்து விசாரித்து வருகின்றனராம்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் உள்ள ஒட்டுமொத்த போட்டியாளர்களும் ஒதுக்கிய போதும் துணிச்சலாக இருந்த நடிகை ஓவியா, கடந்த சில தினங்களாவே ஆரவ் மீது கொண்ட காதல் காரணமாக மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் காணப்பட்டார், இதன் விளைவாக பிக்பாஸ் இல்லத்தில் இருந்து ஓவியா நேற்று வெளியேறினார்.
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ஓவியா சென்னை தி.நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.
இதனையடுத்து ஓவியாவின் ரசிகர்கள் அந்த மருத்துவமனைக்கு போன் செய்து ஓவியாவின் உடல்நிலை குறித்து விசாரித்து வருகின்றனர். ஒருகட்டத்திற்கு மேல் கடுப்பான மருத்துவமனை நிர்வாகம் தற்போது  எந்த அழைப்புகளையும் எடுப்பதில்லை என்றும் கூறப்படுகிறது.