இன்று புதிய பிரபலம், பிக் பாஸ் தந்த அதிர்ச்சி

mgid start
'பிரபலம்' என்ற வார்த்தைக்கு பிக் பாஸுக்கு அர்த்தம் தெரியாது போலிருக்கிறது. பிரபலம் என்று சொல்லிவிட்டாலே அவர்கள் பிரபலம் ஆகி விடுவார்களா என்ன ?. பிக் பாஸ் வார்த்தையில் 'பிரபலம்', நமது வார்த்தையில் புதிய போட்டியாளர். அப்படி ஒரு போட்டியாளராக இன்று நிகழ்ச்சிக்குள் வீட்டிற்குள் நடிகை சுஜா வருணி இறக்கிவிடப்பட்டுள்ளார். நிகழ்ச்சியின் புரோமோவைப் பார்த்தவர்களுக்கு இறக்கி விடப்பட்டதன் அர்த்தம் புரியும்.

பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பிக்கும் போதே 15 பிரபலங்கள் என்று சொல்லிதான் ஆரம்பித்தார்கள். நமீதா, கஞ்சா கருப்பு தவிர மற்றவர்களை எத்தனை பேருக்குத் தெரிந்திருக்கும் என்று தெரியாது. ஏன், அவர்களையே கூட பலருக்குத் தெரிந்திருக்காது. நிகழ்ச்சி ஆரம்பமான சில வாரங்களுக்குள் ஓவியா மட்டுமே உண்மையிலேயே 'பிரபலம்' ஆனார். மற்றவர்களும் அதன் பின் கொஞ்சம் கொஞ்சமாக பிரபலம் ஆனார்கள்.

பொதுவாக புதிய போட்டியாளர் நிகழ்ச்சிக்குள் நுழைந்தால் தொகுப்பாளர் கமல்ஹாசன்தான் அறிமுகப்படுத்தி அனுப்பி வைப்பார். கடந்த சில நாட்களாக நிகழ்ச்சி சுவாரசியமாக இல்லாமல் போவதால் வரும் சனிக் கிழமை வரை காத்திருக்காமல் இன்றே போட்டிக்குள் களம் இறங்கியிருக்கிறார் சுஜா. ஏற்கெனேவே இரண்டு வாரங்களுக்கு முன் புதிதாக நுழைந்த பிந்து மாதவியே என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார். இந்த வாரம் தலைவியாகவும் ஆகிவிட்டார். இப்போது சுஜாவும் உள்ளே நுழைந்திருக்கிறார். இவர் என்ன செய்யப் போகிறாரரோ..?.

எத்தனை பேர் உள்ளே வந்தாலும் 'எங்கள் ஓவியா' எங்கே என்று சமூக வலைத்தளங்களில் ஓவியாவின் ரசிகர்கள் இன்னமும் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்