முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வத்தை கத்தியால் தாக்க முயற்சி..

mgid start
திருச்சி : சென்னையில் இருந்து திருச்சிக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் விஜயபாஸ்கர், தினகரன் அணியைச் சேர்ந்த செந்தில் பாலாஜி ஆகியோர் ஒரே விமானத்தில் சென்றனர். முன்னதாக இவர்கள் மூவரும் விமான நிலையத்தில் 10 நிமிடங்கள் சந்தித்து பேசிக் கொண்டனர்.

திருச்சி விமான நிலையம் சென்றடைந்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு அவரது ஆதரவாளர்கள் பலரும் சால்வை அணிவித்து வரவேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் ஓபிஎஸ்., பேசிக் கொண்டிருந்த போது, கூட்டத்தில் இருந்த மர்ம நபர் ஒருவர் ஓபிஎஸ்.,யுடன் போட்டோ எடுத்துக் கொள்ள வேண்டும் என கூறி உள்ளார். அவரை மத்திய தொழிலக பாதுகாப்பு படை அதிகாரிகள் தடுத்துள்ளனர்.

இந்நிலையில், திடீரென அந்த நபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு ஓபிஎஸ்.,ஐ தாக்க முயன்றுள்ளார். அப்போது அவரை தடுத்த ஓபிஎஸ்., ஆதுரவாளர்கள், மர்ம நபருக்கு தர்ம அடி கொடுத்துள்ளனர். ஓபிஎஸ்.,ஐ தாக்க முயன்ற நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஓபிஎஸ்.,ஐ தாக்க முயன்ற நபரிடம் இருந்து மத்திய தொழிலக பாதுகாப்பு படை அதிகாரிகள் கத்தியை பறித்துள்ளனர்.