பனங்காட்டு நரி, சலசலப்புக்கு அஞ்சாது: ஓவியா குறித்து பரணி

mgid start
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன் வெளியேறிய நடிகர் பரணி சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது பிக்பாஸ் குடும்பத்தின் பங்கேற்பாளர்கள் குறித்து தனது கருத்தை ஒரே வரியில் கூறினார். அவர் கூறியதில் ஓவியாவுக்கு மட்டுமே பாசிட்டிவ் கமெண்ட் ஆக இருந்தது. அவர் ஓவியா குறித்து, 'எந்த சலசலப்புக்கும் அஞ்சாத பனங்காட்டு நரி என்று குறிப்பிட்டார். அவர் மற்றவர்கள் குறித்து என்ன கூறினார் என்பதை பார்ப்போம்
 
சினேகன்: ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவங்க மண்ணுக்குள்ளே. இது எழுதியவருக்கும் பொருந்தும்
 
காயத்ரி: ரொம்ப ஓவரா ஆட்டம் போடறவங்க
 
ஜூலி: இன்னொரு வீட்டுக்கு போன தங்கை
 
ரைசா: செயற்கை ஒன்றும் ஒரிஜினல் ஆகாது. செயற்கை செயற்கைதான்
 
ஆரவ்: கூட்டத்தை பார்த்து ஒத்து ஊதுவது நல்லதல்ல. இது ஆரவ்வுக்கு பொருந்தும்
 
ஓவியா: எந்த சலசலப்புக்கும் அஞ்சாத பனங்காட்டு நரி
 
வையாபுரி: அனுபவம் வாய்ந்த ஜிங்சா
 
சக்தி: ஜாடிக்குள் வளரும் பெரிய மரம்
 
கணேஷ்: ஹைபிரேட் முட்டை
 
நமீதா: சுத்தம் என்பது டாய்லட்டில் மட்டும் இருக்க கூடாது மனதிலும் இருக்க வேண்டும்
 
ஆர்த்தி: மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தால் பொன்குடம்
 
பரணி: தமிழ் பேச தெரிந்த குடும்பங்களின் வீட்டில் ஒருத்தன் இப்படி இருப்பான்
 
கஞ்சா கருப்பு: எல்லா தெருவிலும் இவரை மாதிரி ஒருத்தர் இருப்பார்