நேர்மையான அதிகாரியை லஞ்சம் வாங்க சொல்லி வற்புறுத்தியதால் தற்கொலை முயற்சி..!

mgid start
பசுமை வீடு திட்டத்திற்காக பயனாளிகளிடம் லஞ்சம் பெற்றுத் தர மறுத்த பெண் ஊராட்சி செயலாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதனால், மனமுடைந்த அவர், விஷமருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டினம் ஒன்றியத்திற்கு உட்பட்ட அதிகாரிபட்டி ஊராட்சி அலுவலகத்தில், பணியாளராக இருந்து வந்த கவுரி என்பவர் செயலாளராக பதவி உயர்வு பெற்றார். 

முன்னாள் ஊராட்சி தலைவரான அதிமுகவை சேர்ந்த மாரியப்பன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி ஆகியோர் ஊராட்சியில் நடைபெறும் பல்வேறு திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகளிடம் லஞ்சம் பெற்றுத் தர வேண்டும் என கவுரியிடம் கோரி உள்ளனர். 

இதற்கு ஊராட்சி செயலாளரான கவுரி மறுப்பு தெரிவிக்கவே, அவரை பணியிட மாற்றம் செய்து உள்ளனர். இதனால் மனமுடைந்த அவர், விஷமருந்தி தற்கொலைக்கு முயன்று உள்ளார். இதையடுத்து, சேலம் அரசு மருத்துவமனைக்கு கவுரி சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.