கேரளாவை அடுத்து சென்னை வருகிறார் சன்னி லியோன்!

mgid start
'சூப்பர் ஸ்டார் ரஜினியின் படத்தைத் தயாரிக்க வேண்டும்' என்பது பிரமாண்ட தயாரிப்பாளர் 'கலைப்புலி' தாணுவின் முப்பதாண்டு கால கனவு. கடந்த ஆண்டு அந்தக் கனவு பலித்தது  தனது  மூத்த மகன் பரந்தாமனை 'கபாலி' படத்தின் இணைத் தயாரிப்பாளராக்கி அழகுபார்த்தார் தாணு. அடுத்து 'வேலையில்லா பட்டதாரி-2' படத்திலும் அந்த அங்கீகாரம் தொடர்ந்தது. அடுத்து தாணுவின் இளையமகன் கலாபிரபு  'சக்கரகட்டி' படத்தை இயக்கினார். தற்போது கவுதம் கார்த்திக்கை வைத்து இந்திரஜித் என்ற படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார் கலாபிரபு. 
இத்திரைப்படத்தின் ஒரு காட்சியில் சன்னி லியோன் நடனமாடி நடித்தால் திரைக்கதையில் திருப்புமுனை ஏற்படும் என்று யோசித்து இருக்கிறது 'இந்திரஜித்' படக்குழு. இதற்காக, மும்பையில் இருக்கும் சன்னி லியோனிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. வழக்கமாக  தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள்  தங்கள் படங்களில் நடிப்பதற்கு அணுகியபோது எல்லாம் சன்னி லியோன் கேட்ட சம்பளத்தைப் பார்த்து மிரண்டு போய் திரும்பிவந்திருக்கிறார்கள். இந்நிலையில் 'இந்திரஜித்' படத்துக்காக சென்னையில் நடத்தப்படும் படப்பிடிப்புக்காக விரைவில் சன்னிலியோன் சென்னைக்கு வரவிருப்பதாகத் தகவல் பரவியுள்ளது.
இந்தி சினிமாவில் நடிப்பதையே தவிர்த்து வந்த கஜோலையே 'விஐபி-2' படத்தில் நடிக்க வைத்த தாணுவின் வி.கிரியேஷன், கண்டிப்பாக சன்னி லியோனை  'இந்திரஜித்' படத்தில் நடிக்க வைத்துவிடும் வேலையில் இறங்கி இருக்கிறது. ' கேரளாவில் கொச்சின் நகருக்குசன்னி லியோன் வருகை தந்தபோது ஏற்பட்ட மக்கள் வெள்ளத்தால் அந்நகரமே அதகளமானது. அந்த கொண்டாண்டத்துக்கு கொஞ்சமும் குறைவில்லாமல் 'இந்திரஜித்' படத்துக்காக சன்னிலியோன் சென்னைக்கு வரும்போது பிரமாண்ட நிகழ்வுக்கு ஏற்பாடு செய்ய இருக்கிறது வி கிரியேஷன் டீம்' என்கின்றனர் படக் குழுவினர்.