கிராமத்து தக்காளி ரசம்

mgid start
என்னென்ன தேவை?

நாட்டுத்தக்காளி - 3,
பூண்டு - 3 பல்,
தனியா - 1 டீஸ்பூன்,
சீரகம் - 1/2 டீஸ்பூன்,
காய்ந்தமிளகாய் - 2,
கடுகு - 1/2 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிது,
புளி - 1/2 எலுமிச்சை அளவு,
மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
எண்ணெய் - 2 டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை,
கொத்தமல்லித்தழை - சிறிது.

எப்படிச் செய்வது?

சீரகம், தனியா, காய்ந்தமிளகாய், மிளகு, பூண்டு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். பாத்திரத்தில் தக்காளியை தண்ணீர் சேர்க்காமல் நன்கு கரைத்து கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு தாளித்து, கரைத்த தக்காளி, புளித்தண்ணீர் சேர்த்து மிளகுத்தூள், உப்பு, பெருங்காயத்தூள், ரசத்துக்குத் தேவையான தண்ணீரைச் சேர்க்கவும். ரசம் நுரை கட்டும் வரை சூடு செய்யவும். ஆனால் ரசத்தை கொதிக்க விடக்கூடாது. நுரை பொங்கி வரும்போது நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழையை தூவி, சூடாக சாதத்துடன் பரிமாறவும்.