மச்சான் எல்லா பாலும் உள்ள போடுறான்.. தமிழில் பேசிய முரளி விஜய்.. வீடியோ

mgid start
Vijay to Rahul in Tamil - "Macha, indhe over le ellam ulla than podaraan" (Dude, he's bowling everything that's going to come in)

The stump mic has caught some amazing dialogues.
செஞ்சுரியன்: இந்திய அணி தென்னாப்பிரிக்காவிற்கு நீண்ட கிரிக்கெட் தொடர் விளையாட சென்று இருக்கிறது. தற்போது டெஸ்ட் தொடர் நடந்து கொண்டு இருக்கிறது.
கேப்டவுனில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா மோசமாக தோற்றுப்போனது. இதில் இந்திய பேட்ஸ்மேன்கள் மோசமாக விளையாடினார்கள்.


இந்த நிலையில் இரண்டாவது போட்டியில் சில சுவாரசியமான சம்பவங்கள் நடந்து இருக்கிறது. தமிழக வீரர் முரளி விஜய் இந்த போட்டியில் தமிழில் பேசி இருக்கிறார்.

தமிழில் பேசினார்

இந்த போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங் செய்த போது முரளி விஜய் தமிழில் பேசி இருக்கிறார். அப்போது அவர் கே.எல் ராகுலிடம் ''மச்சான் இந்த ஓவர்ல எல்லா பாலும் உள்ளதான் போடுறான்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார். இது ஸ்டம்பில் இருந்த மைக்கில் பதிவாகி இருக்கிறது.