​கணவனை துப்பாக்கி முனையில் வைத்து மனைவியை பாலியல் வன்புணர்வு செய்த மர்ம நபர்கள்!

mgid start
டெல்லியில் கணவன் கண் முன்னால் இளம் மனைவி நள்ளிரவில் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

தெற்கு டெல்லியில் கணவன், மனைவி மற்றும் கணவரின் சகோதரர் ஆகிய மூவரும் குடும்ப நிகழ்ச்சி ஒன்றில் பங்கெடுத்துவிட்டு நேற்று நள்ளிரவில் வீடு திரும்பிக் கொண்டு இருந்தனர். அப்பொழுது குர்கானில் உள்ள பிசினஸ் பார்க் டவர் அருகில் கழிவறை பயன்படுத்துவதற்காக கணவர் காரை நிறுத்தியுள்ளார். பின்னர் அவர் கழிவறைக்கு சென்றபோது மர்ம நபர்கள் நான்கு பேர் இரண்டு கார்களில் வந்து எதற்காக இங்கு நிற்கிறீர்கள் என்று தனியாக இருந்த பெண்ணிடம் கேட்டுள்ளனர். 

பின்னர், அப்பெண்ணை காரில் இருந்து வெளியே இழுத்துள்ளனர், அப்பொழுது அந்த இடத்திற்கு விரைந்து வந்த கணவர் மற்றும் அவரது தம்பியை துப்பாக்கி முனையில் வைத்து மனைவியை அவர்கள் பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து போலீசாரிடம் புகார் அளித்தால் வீபரீத விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்து விட்டு அங்கிருந்து தப்பித்து சென்றனர்.

அதனைத்தொடர்ந்து அவர்கள் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தனர். அப்பொழுது, இரண்டு காரில் ஒரு காரின் பதிவு எண்ணை, அப்பெண்ணின் கணவன் போலீசாரிடம் தெரிவித்தார். இதனடிப்படையில், ஜோஹல்கா பகுதியில் இருந்த குற்றவாளிகளை போலீசார் கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர்.

டெல்லிக்கு அருகில் உள்ள ஹரியானா மாநிலம் குர்கான் நகரத்தில், கணவனை துப்பாக்கி முனையில் பிடித்து வைத்து, 22 வயதான மனைவியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் தலைநகரான டெல்லியில் பெண்களுக்கான பாதுகாப்பை தொடர்ந்து கேள்விக்குறியாக்கியுள்ளது.