நாளைக்கு குடியரசு தினம் எல்லாருக்குமே தெரியும்.. இன்னைக்கு என்ன தெரியுமா..? எதை கொண்டாட வேண்டும் என்று அரசு சொல்லி கொடுக்கிறதா..?

mgid start
இந்திய அரசாங்கத்தால் இளம் வாக்களர்களை ஊக்கப்படுத்துவதற்காக தேசிய வாக்காளர் நாள் அனுசரிக்கபடுகிறது.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ஆம் தேதி "தேசிய வாக்காளர் நாள்" என்று அழைக்கப்பட்டு அரசால் கொண்டாடப்படுகிறது.
வாக்களிப்பதை மக்கள் தங்கள் கடமையாகக் கருத வேண்டும் என்ற விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவது இந் நாளின் நோக்கமாகும்.
18 வயது நிரம்பிய இந்தியக் குடிமக்கள் அனைவரும் வாக்களிக்கத் தகுதி வாய்ந்தவர். தேர்தல் என்பது பொதுவாக 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை வருகிறது.
சாதி, மதம், இனம் என்ற வேறுபாடுகளைக் களைந்து 18 வயது நிரம்பிய இந்திய குடியுரிமை பெற்ற மக்கள் அனைவரும் வாக்களிக்கத் தகுதி உள்ளவர்கள்.
எந்த வேறுபாடும் பார்க்காமல் வாக்காளர் அனைவருக்கும் வாக்காளர் அடையாள அட்டை ஒன்று தேர்தல் ஆணையத்தால் வழங்கபடுகின்றது.
ஒவ்வொரு தகுதியான வாக்காளரும் தங்களின் வாக்குரிமையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எனது இளைய நண்பர்கள் 18 வயது ஆகும்போது தங்களை வாக்காளராக பதிவு செய்து கொள்ள வேண்டும்.
தேர்தல் என்பது குடியரசின் கொண்டாட்டமாகும். இது குடியரசு நாட்டில் மக்களின் மன விருப்பத்தை பிரதிபலிக்கிறது.
அதனை கருத்தில் கொண்டு மன விருப்பத்தின் படி வாக்களிக்கும் வாக்காளர்களாக மாற வேண்டும். இப்போது இருக்கும் பண விருப்பம் போல அல்லாமல்...