உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணத்தினை குறைத்து தமிழக அரசு அறிவிப்பு

mgid start
தமிழக அரசு கடந்த 19ந்தேதி பேருந்து கட்டணத்தினை உயர்த்தி அறிவித்தது.  இதற்கு எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.  சென்னையில் சேப்பாக்கத்தில் நேற்று தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.

இந்த நிலையில், உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணத்தினை தமிழக அரசு இன்று குறைத்து அறிவித்துள்ளது.

சாதாரண பேருந்துகளில் 10 கி.மீட்டர் வரை ஒரு கி.மீட்டருக்கு 60 பைசாவில் இருந்து 58 பைசா குறைக்கப்படும்.  விரைவு பேருந்துகளில் 30 கி.மீ. வரை 80 பைசாவில் இருந்து 75 பைசாவாக குறைக்கப்படும்.  சொகுசு பேருந்துகளில் 30 கி.மீ. வரை 90 பைசாவில் இருந்து 80 பைசா வரை குறைக்கப்படும்.

அதிநவீன சொகுசு பேருந்துகளில் கி.மீட்டருக்கு 110 பைசாவில் இருந்து 100 பைசாவாக குறைக்கப்படும்.  குளிர்சாதன பேருந்துகளில் 140 பைசாவில் இருந்து 130 பைசாவாக குறைக்கப்படும்.

சென்னை மாநகர பேருந்துகளில் அதிகபட்ச கட்டணம் ரூ.23ல் இருந்து ரூ.22 ஆகவும், குறைந்தபட்ச கட்டணம் ரூ.5ல் இருந்து ரூ.4 ஆகவும் குறைக்கப்பட்டு உள்ளது.

அனைத்து நிலைகளிலும் ரூ.1 வரை கட்டணம் குறைக்கப்பட்டு உள்ளது.  கட்டண குறைப்பினால் நாள் ஒன்றுக்கு ரூ.4 கோடி அரசுக்கு இழப்பு ஏற்படும்.  இந்த பேருந்து கட்டண குறைப்பு நாளை முதல் அமலுக்கு வரும்.