‘நீங்க டீச்சர் இல்ல... ஸ்டூடண்ட் மாதிரி இருக்கீங்க’ தகாத நட்பால் விளைந்தது விபரீதம்

mgid start
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே 25வயது வாலிபருடன் 45 வயது ஆசிரியைக்கு ஏற்பட்ட விபரீத நட்பும், இதை மூலதனமாக்கி 8 லட்சம் ேகட்டு வாலிபர் மிரட்டியதும் தெரியவந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்தவர் ஆசிரியை தமிழ்செல்வி(45).(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், ராயக்கோட்டையை அடுத்துள்ள நெல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பணியாற்றி வருகிறார். இவரது கணவர் அரவிந்தன்(60), பெங்களூருவில் தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் சூப்பர் வைசராக பணியாற்றி வருகிறார். ஆசிரியை தமிழ்செல்வி ராயக்கோட்டை மார்க்கெட்டுக்கு தக்காளி வாங்க அடிக்கடி சென்று வந்ததில் அங்கு கடையில் பணியாற்றிய மணிவேல்(25) என்ற வாலிபருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. செல்போன் மூலம் தக்காளி வாங்கி வரச்சொல்லும் ஆசிரியையின் அன்பு கட்டளையை ஏற்று மணிவேல், வீட்டுக்கே கொண்டு கொடுப்பதும் தொடர்ந்தது. மேலும் இரவில் மணிவேல் ஆசிரியையின் செல்போனுக்கு வாட்ஸ் அப் மெசேஜ் அனுப்பியுள்ளார். அதில் மணிவேல், ‘‘நீங்கள் ரொம்ப அழகா இருக்கீங்க, டீச்சர் மாதிரி தெரியலை, ஸ்டூடண்ட் மாதிரி இருக்கீங்க’’ என்று அனுப்பியுள்ளார். இந்த வார்த்தைகளில் மயங்கிய ஆசிரியை மாணவிகளுடன் இருக்கும் படத்ைத மணிவேலின் வாட்ஸ் அப்புக்கு அனுப்பியுள்ளார்.


இந்த நட்பு பார்க், தியேட்டர், சினிமா என்று நீண்டது. இருவரும் காட்டிய நெருக்கம், கணவன், மனைவி போல் இருக்க வைத்தது. ஆசிரியை தனது சம்பளத்தில் பாதியை மாதம் தோறும் மணிவேலுக்கு கொடுத்துள்ளார். ஆனால் பணம் கையில் புரளத் தொடங்கியதும் மணிவேலின் எண்ணங்களும் மாறியது. ஆசிரியைக்கு தெரியாமல் அவர்களது அந்தரங்க நட்பை பல்வேறு கோணங்களில் செல்போனில் பதிவு செய்தார். ஆயிரக்கணக்கில் வாங்குவதை லட்சமாக்க முடிவு செய்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனக்கு ₹ 8லட்சம் தரவேண்டும் என்றும், இல்லாவிட்டால் நமது அந்தரங்க உறவு, அகிலம் முழுவதும் வலம் வரும் என்றும் கூறி மிரட்டியுள்ளார். 


குறிப்பிட்ட நாளில் மணிவேல் கேட்ட பணத்தை ஆசிரியையால் கொடுக்க முடியவில்லை. இந்நிலையில் யூ டியூப்பில் ஆசிரியையுடன் நெருக்கமாக இருக்கும் போட்ேடாக்கள், வீடியோக்களை வைரலாக பரவவிட்டார். இது கிராமத்து பள்ளி வளாகம் வரை தீயாய் பற்றி எரிந்தது. ஆசிரியையின் ஒழுங்கீனத்தை கண்டித்து குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து பெற்றோர் போராட்டத்தில் குதித்தனர். கல்வித்துறையோ ஆசிரியையை சஸ்பெண்ட் செய்தது. வீடியோவை பரப்பிய மணிவேல் தலைமறைவாகி விட்டார். இவரோ வீட்டை விட்டு வெளியே தலைகாட்ட முடியாமல் முடங்கிக் கிடக்கிறார். கண்ணியம் மிகுந்த பணி செய்தவர், இப்படி காட்சிப் பொருளாக பேசப்படுவது உண்மையில் இதயத்தை ரணமாக்குகிறது என்கின்றனர் சக ஆசிரியர்கள்.