அந்த காலத்து கோவா எப்படி இருந்துச்சினு உங்களுக்குத் தெரியுமா?

mgid start
ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு சிறப்பு இருக்கும். சில வரலாற்றுக்கு பெயர் பெற்றதா இருக்கும். சில புராணக்கதைகள்ல கேள்விபட்டதாக இருக்கும். இப்படி கோயில், ஆன்மீகம்னு நிறைய இடங்கள் இந்தியாவுல நாம் பேசப்படுற ஒவ்வொரு செய்திகள்லயும் வந்துட்டே இருக்கும். அப்படி ஒரு இடம்தான் கோவா. நம்ம கல்லூரி படிக்க ஆரம்பிச்சதுல இருந்து இன்னும் ஏன் இப்ப வர தலைமுறைங்க பள்ளிப்பருவத்திலேயே கோவாவுக்கு போக ஆசப்படறாங்க.
இந்தியாவிலேயே வேறெங்கும் அனுபவிக்கமுடியாத இளமைய இங்க அனுபவிக்கலாம்னு அவங்க மனசுல ஆணித்தரமாக அடிச்சி வச்சிருக்காங்க. நீங்க நினைக்குறமாதிரியே இப்ப இருக்குற கோவா, பல வருடங்களுக்கு முன்னாடி எப்படி இருந்துச்சினு தெரியுமா? பல வருடங்களுக்கு முன்னர் இருந்த கோவாவை புகைப்படங்களில் காணுங்கள். மேலும், கோவா பற்றி நீங்கள் அறிந்திராத பல அரிய தகவல்களையும் இங்கு படித்து தெரிந்துகொள்ளுங்கள். வாங்க தெரிஞ்சிக்கலாம். நீங்கள் கண்டு வாயைப்பிளக்கும் கோவாவின் உண்மை முகம்.
இரண்டு விதமான சுற்றுலா

இரண்டு விதமான சுற்றுலா

முதல் படம் - கோவாவில் தத்ரூபமாக செதுக்கப்பட்ட பாறை சிற்பத்தை ஒருவர் கண்கொட்டாமல் ரசிக்கிறார்
கோவாவில் இரண்டு விதமான சுற்றுலா இருக்கிறது. அதாவது கால நிலையைப் பொறுத்து இரண்டு விதமாக பார்க்கப்படுகிறது. குளிர்கால கோவா சுற்றுலா என்பது ஒன்று, மற்றொன்று கோடைக்கால கோவா சுற்றுலா ஆகும். குளிர்காலத்தில் வெளிநாட்டுப் பயணிகள் அதிகம் வருகை தருகிறார்கள். நம்மவர்கள் கோடைக்காலத்தில், வெய்யிலின் கொடுமையை தவிர்த்து கோவாவில் கும்மாளம் அடிக்க செல்கிறோம். கவலை வேண்டாம், நமக்கு வெய்யில் வாட்டி வதைக்கும்போது, கோவாவில் அது மழையை நெருங்கும் காலம்.
 ஒரு மாநிலமே சுற்றுலாத்தளம்

ஒரு மாநிலமே சுற்றுலாத்தளம்

இரண்டாவது படம் - எதையோ பார்த்து போரிடுவது போல ஒருவர் கொடுக்கும் போஸ். சூப்பர்மேன் போல் பறக்கிறாரோ...
கோவா ஒரு மாநிலமே அல்ல என்பதுதான் இந்திய அரசின் கொள்கைப்படி சரி. ஆனால், மாநிலத்துக்கு உண்டான எல்லா அம்சங்களையும் பெற்றுள்ளது. தனி அமைச்சகம், முதல் அமைச்சர், ஆளுநர் என அனைத்தும் மற்ற யூனியன் பிரதேசங்களுக்கு இருப்பதை போலல்லாமல், கோவாவில் இருக்கிறது. அதுமட்டுமல்ல.. கோவாவின் இம்மி இடுக்கு கூட விடவேண்டாம். அனைத்தும் சுற்றுலாத்தளமாகும்.
இந்தியாவிலேயே அதிக சுற்றுலாப் பயணிகள்

இந்தியாவிலேயே அதிக சுற்றுலாப் பயணிகள்

மூன்றாவது படம் - அய்யோ பயமாக இருக்கிறதே..
கோவா அரசின் 2016ம் ஆண்டு கணக்குப்படி, அங்கு சுற்றுலாவுக்கு வந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 63லட்சம் பேர். இதில் வெளிநாட்டு பயணிகள் மட்டும் 56லட்சம் பேர்.
இப்படி அதிகஅளவு சுற்றுலாப் பயணிகள் வருகை தரக்காரணம் கோவாவின் செழுமைதான். கோவாவின் சுற்றுலாத் துறை சீரும் சிறப்புமாக செயல்பட்டு, சுற்றுலாப் பயணிகளின் தேவைகளை பூர்த்தி செய்கிறது.
 இந்தியாவில் ஒரு பாஃரீன் கண்ட்ரி

இந்தியாவில் ஒரு பாஃரீன் கண்ட்ரி

4வது படம் - அம்மாடி .. அந்த காலத்திலேயே இத்தனை பேரா....
உண்மையில் கோவா சென்றுவந்தவர்களுக்கு தெரியும். நீங்கள் கோவாவைப் போல மற்ற எந்த இடத்தையும் பார்க்கமுடியாது. அந்த அளவுக்கு வெளிநாட்டு கலாச்சாரம் நிறைந்ததாகவே காணப்படும் (ஒரு சில இடங்களைத் தவிர்த்து) சுற்றிலும் வெளிநாட்டுப்பயணிகள், அவர்களின் பொழுதுபோக்குக்கான அம்சங்களைப் பார்க்கும்போது ஒரு கணம், நாம் வெளிநாட்டு சுற்றுலா வந்திருக்கிறோமோ என்று ஐயம் கொள்ளத்தோணும்.
 கடற்கரையின் நீளம் தெரியுமா

கடற்கரையின் நீளம் தெரியுமா

5 வது படம் - மரத்தடியில் இளைப்பாறும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்
கோவாவின் கடற்கரைகள் உலகின் ஒவ்வொருவரின் காலடியும் படவேண்டிய அற்புதம் நிகழும் மையமாகும். நீண்டு பரந்த கடற்கரைகள் சுமார் 125கிமீ தொலைவு கொண்டவை. இவை வடக்கு மற்றும் தெற்கு கோவா என்று பிரிக்கப்பட்டு, அதிலும் சிறு சிறு பகுதிகளாக வெளிநாட்டவருக்கான பீச் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு பீச் பகுதியிலும் மிகச் சிறப்பான அனுபவத்தை பெற முடியும். இளைஞர்களுக்கான அத்தனை அம்சங்களையும் ஒருசேர வழங்குகிறது கோவா.
 திரில் அனுபவங்கள்

திரில் அனுபவங்கள்

6வது படம் - தாடி வைத்துக்கொண்டு டீ அருந்தும் ஒருவருடைய படம்
இங்குள்ள கடற்கரைகள், வெறுமனே குளித்து கும்மாளமிட மட்டும்தான் என்று நீங்கள் நினைத்திருந்தால், அந்த கருத்தை உடனே அழித்துவிடுங்கள். இந்தியாவின் எந்த இடத்திலும் செய்யவேண்டிய சாகசங்களை இங்கு நீங்கள் புரியலாம். முக்கியமாக தண்ணீர் விளையாட்டுக்கள். வான்குடை மூலமாக பறந்து செல்வது, அலையில் விளையாடுவது, ஜெட் ஸ்கிங், பாரா செய்லிங் என உங்களை சாகச வீரராக மாற்றும் அத்தனை விளையாட்டுக்களும் இங்கு இருக்கின்றன.
கோவாவில் ஆறுகள்

கோவாவில் ஆறுகள்

7வது படம் - நிலவிடம் காதலை யார் சொல்வது.. போட்டியிட்டுக்கொள்ளும் பனைமரங்கள்...
கோவாவில் கடற்கரை மட்டுமல்ல சிறப்பான மற்ற சில இடங்களும் இருக்கின்றன. அவற்றில் ஆறுகள் முக்கிய இடத்தைப் பிடிக்கின்றன. மண்டோவி, சுஹாரி, தெர்கோல், சோப்ரா ஆறு, சல் என்பவை முக்கியமானவை. கோவாவின் 69 சதவிகித நிலப்பரப்பை ஆறுகளே ஆக்கிரமிக்கின்றன.
இயற்கைத் துறைமுகம்

இயற்கைத் துறைமுகம்

8வது படம் - அந்த பக்கம் பீச்.. இந்த பக்கம் ஆறு... நடுவுல சுற்றுலாப் பயணிகள்
பொதுவாக துறைமுகங்கள் நாமாக அமைத்துள்ளவையாகத்தான் இருக்கும். ஒரு சில விதிவிலக்குகள் உண்டு. அதாவது துறைமுகத்துக்கான அமைப்பை இயற்கையாகவே பெற்றிருக்கும் இடங்களை நாம் இயற்கைத் துறைமுகம் என்கிறோம். இந்தியாவில் இயற்கையிலே அமைந்து துறைமுகங்கள் குறைவுதான். அதில் ஒன்று கோவாவில் அமைந்துள்ள மர்மகோவா. இதற்கு ஏன் இப்படி ஒரு பெயர் வந்தது என்று தெரியவில்லை. கனிம வளங்கள் நிறைந்தது கோவா. இரும்பு, அலுமினியம் போன்ற கனிமங்கள் இங்குள்ள கடற்கரைகளில் அதிகம் காணப்படுகிறது.
கழிமுகங்கள்

கழிமுகங்கள்

மங்கிய ஒளி மாலையில் இயற்கையை அனுபவிக்கு பயணிகள்
ஆறுகள் கடலைச் சென்று சேரும் ஒவ்வொரு இடத்தையும், நாம் கழிமுகம் என்னும் பெயரால் அழைக்கிறோம். உண்மையில் கழி என்பது ஆறும் கடலும் சேரும் இடம். இங்கு 40க்கும் மேற்பட்ட இடங்களில் ஆறு கடலில் கலக்கிறது. மேலும், இங்கு எட்டு மிகப்பெரிய கடற்கரைகள், தொண்ணூறு ஆறுகள் (கிளையாறுகள், நீரோட்டங்கள் எல்லாம் சேர்த்து) என வளம் மிகுந்து காணப்படுகிறது.
 கோடையிலும் குதூகலிக்கும் கோவா

கோடையிலும் குதூகலிக்கும் கோவா


கடற்கரையில் தம் அடிக்கும் இரு ஆண்கள்
வெப்பகாலத்தில் கோவாவுக்கு செல்ல அதிகம் பேர் விரும்புவது எதற்காக தெரியுமா? ஏனென்றால் இங்கு கோடைக்காலத்தில் அடிக்கும் வெய்யில் மிகுந்த ஈரப்பதத்துடன் இருக்கும். மே இறுதியில் வெய்யில் குறைந்து படிப்படியாக மழைக்காலம் தொடங்குகிறது. டிசம்பர் முதல் பிப்ரவரி வரை இங்கு குளிர் காலம். கொண்டாட்டங்கள் குதூகலிக்கும்.
கோவாவில் மூங்கில் பிரம்புகள், மரத்தா பார்க்ஸ், சில்லர் பார்க்ஸ், பிஹிரண்ட் ஆகியன கிடைக்கின்றன. தேக்கு, முந்திரி, மாம்பழம், பலா, அன்னாச்சி முதலியனவும் இங்கு கிடைக்கின்றன.