கள்ளக்காதலியின் மகள் மேல் ஏற்பட்ட ஆசை… இறுதியில் நிகழ்ந்த சோகம்

mgid start
சென்னை காசிமேடு பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் முன் இறந்ததால் இவரது மனைவி கீதாவுக்கும், முகிலன் என்பவருக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
இது நாளடைவில் அவர்களுக்குள் கள்ள காதலாக மாறியுள்ளது. தாயுடன் மட்டுமின்றி மகள் சிவசங்கரியிடமும் பழகி வந்துள்ளார். இதனால் ஒரு கட்டத்தில் கீதாவின் மகளை திருமணம் செய்து கொள்ள முகிலனுக்கு ஆசை வந்துள்ளது.
பின்னர் இது பற்றி கீதாவிடம் முகிலன் கூறியபோது அதற்கு அவர் மறுத்துள்ளார். மேலும் முகிலன் அடிக்கடி கீதாவுடன் தகராறில் ஈடுபட்டதால் கீதா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து ஒரு நாள் கீதாவும் அவரது மகள் சிவசங்கரியும் தனியாக நடந்து சென்ற போது முகிலன் கீதாவை கத்தியால் வெட்டியுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சிவசங்கரி தடுக்க வந்த போது அவரையும் முகிலன் தாக்கியுள்ளார்.
அப்போது இவர்களின் அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் ஓடி வந்ததை பார்த்த முகிலன் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். பின்னர் இது பற்றி தகவலறிந்த பொலிசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான முகிலனை போலீசார் தேடி வருகின்றனர்.