ரூபாய் நோட்டு ஆச்சடிக்கும் இடத்தில இருந்து நோட்டுக்களை பலநாட்களாக திருடி சென்ற உயர் அதிகாரி

mgid start
ரூபாய் நோட்டு ஆச்சடிக்கும் இடத்தில இருந்து நோட்டுக்களை பலநாட்களாக திருடி சென்ற உயர் அதிகாரி

மத்திய பிரதேசம் தாவா: இந்திய அரசாங்கத்தன் நோட்டு அச்சடிக்கும் இடத்தில் இருந்து சுமார் 90 லட்சம் ரூபாயை தனது ஷுவில் மறைத்து எடுத்து சென்ற உயர் அதிகாரியை பாதுகாப்பு படையினர் கையும் களவுமாக பிடித்துள்ளனர். சிறிய அளவிலான குறைகள் உள்ள நோட்டுக்களை நோட்டு அச்சடிக்கும் இடத்தில் அழித்து விடுவது வழக்கால் ஆனால் மனோகர் வர்மா என்ற உயர் அதிகாரி அந்த நோட்டுக்களை அழிக்காமல் மறைத்து நீண்ட காலமாக மறைத்து எடுத்து வந்துள்ளார். அந்த சிறிய அளவிலான குறைகளை கண்டுபிடிப்பது கடினம் என்பதால் இதை எளிதில் புழக்கத்தில் விட்டு விடலாம்.
தனது அறையில் ஷுவில் எதையோ இவர் மறைப்பது சிசிடிவி காட்சிகள் மூலம் பார்த்த பாதுகாப்பு அதிகாரிகள் இவர் மீது சந்தேகப்பட்டு சோதனை செய்தததில் சிக்கியுள்ளார். ஷுவில் இருந்த பணத்தை பார்த்த அதிகாரிகள் அவரது அலுவலக அறையை சோதனை செய்த போது அங்கிருந்து 90 லட்சம் ரூபாய்யை கை பற்றியுள்ளனர்.
போதுவாக சோதனையின் போது ஷுவை பரிசோசிப்பது இல்லை என்ற சலுகையை பயன்படுத்தி இவர் திருடி வந்துள்ளார்.
செய்திகள் வெளியே கசிந்ததும் ஒருவர் 90 லட்சம் வரை திருடியும் அது தெரியாமல் இருந்தது எப்படி என தங்களது பெயருக்கு இழுக்கு ஏற்பட்டு விடும் எனக் கருதி இந்த அச்சடிக்கும் இடம் ஆர்பிஐ கட்டுப்பாட்டில் இல்லை என ஆர்பிஐ விளக்கம் அளித்துள்ளது. ஆர்பிஐ கட்டுப்பாட்டில் இல்லை என்றாலும் அரசாங்க நோட்டை பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமையே 90 லட்சத்தை திருடும் வரை என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என விமர்சனங்கள் எழுந்துள்ளது.