மின்சாரக் கட்டணத்தை உயர்த்துவது குறித்து அமைச்சர் விளக்கம்!

mgid start
பேருந்து கட்டணம் போல் மின்சார கட்டணம் உயர்த்தப்படாது என மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கமணி, மின்சார வாரிய ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை தற்போது சுமூக நடைபெற்று வருவதாக கூறினார். பேச்சுவார்த்தை இன்னும்  நிறைவடையாததால் தொழிலாளர்களுக்கு இடைக்கால நிவாரணமாக 2 ஆயிரத்து 500 ரூபாயும், ஓய்வுபெற்ற மின் ஊழியர்களுக்கு ஆயிரத்து 250 ரூபாயும் வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த பிரச்சனையால் மின்சார கட்டணம் உயர்த்தப்படாது என்றும் தெரிவித்தார்.