மரத்தில் ஒரு மர்ம பிணம் || Who put Bella in the Wych Elm

mgid start
"மரத்தில் ஒரு மர்ம பிணம் " 
April 18, 1943, இங்கிலாந்தில் ஒரு 4 சிறுவர்கள் ஒரு காட்டு பகுதியில் வேட்டைக்கு சென்றிருந்தார்கள். அதில் ஒரு 15 வயது சிறுவன் wych elm எனப்படும் ஒரு வகை மரத்தை கண்டான். 'இதில் நிச்சயம் பறவை கூடுகள் கிடைக்கும் ' அதில் பரபரவென ஏறியவன் அங்கே உள்ள ஒரு பெரிய பொந்தில் கையை விட்டான். அங்கே ஏதோ ஒரு வித்தியாசமான ஒன்று கையில் தட்டு பட்டது. அதை வெளியில் எடுத்தவன் அதிர்ந்தான். அது ஒரு அழுகிய நிலையில் இருந்த பிணத்தின் எலும்பு கூடு.


அந்த எலும்பு கூடு ஒரு பெண்ணின் எலும்பு கூடு என்று புரிந்தது. அதன் மண்டையில் இன்னும் கொஞ்சம் தசை பகுதியும் அதில் தொங்கும் முடிகளும் காண பட்டன அந்த கருவாடாய் போன பிணத்தின் ஒரு கை காணவில்லை. அந்த மண்டை ஓட்டின் இரண்டு முன் பற்கள் உடைத்து எடுக்க பட்டிருந்தது.

சிறுவர்கள் அலறி கொண்டு ஓடி ஊர் மக்களை அழைத்து வந்து ஆராய்ந்த போது மரத்திற்கு பக்கத்தில் அந்த பெண்ணின் துணிகள் புதைத்து வைக்க பட்டிருந்தது தெரிந்தது . கூடவே அவளது காணாமல் போன கை.

நிபுணர்கள் இதை ஆராய்ந்து இந்த பென்னின் வயது 30 35 இருக்கலாம் என்றார்கள். அவளுக்கு இந்த கொடூரம் ஒரு 18 மாதம் முன் நடந்து இருக்கலாம் என்றார்கள். கொடூரத்தின் உச்சமாய் அவள் மர பொந்தில் கைகள் பிய்க்க பட்டு சொருக பட்ட போது அவள் உயிரோடு இருந்ததாக சொன்னார்கள்.

எவ்வளவு துப்பறிந்தும் அந்த பெண் யார் என்ன என்று சிறு துப்பும் கிடைக்க வில்லை. அந்த ஊர் மக்கள் அந்த பெண்ணுக்கு பெல்லா என்ற கற்பனை பெயரை வைத்தார்கள். அந்த கேஸ் அந்த ஊரில் மிக பரபரப்பாக பேச பட்டது.
“Who put Bella down the wych-elm?” 


என்று அந்த ஊர் மக்கள் பார்க்கும் சுவரில் எல்லாம் எழுதி வைத்தார்கள்..
கடைசி வரை ... இன்று வரை...விடை தான் கிடைக்க வில்லை. தீர்க்க படாத மர்மமாகவே இருக்கிறாள் பெல்லா. (மேலும் அறிய Bella in wych elam என்று தேடி பாருங்கள் )