பாலியல் உறவு கொண்டால் வீட்டு வாடகை கிடையாது! அதிரவைக்கும் ஆய்வு

mgid start

பிரித்தானியாவில் பாலியல் உறவு கொண்டால் வீட்டு வாடகை கிடையாது! அதிரவைக்கும் ஆய்வு

பிரித்தானியாவின் வேல்ஸில் தன்னுடன் உறவு கொண்டால் வீட்டுக்கு வாடகை தரவேண்டாம் என பெண்ணிடம் வீட்டு உரிமையாளர் கூறிய நிலையில் நாட்டின் லட்சக்கணக்கான பெண்களுக்கு இந்த அனுபவம் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
வேல்ஸில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வீடு வாடகைக்கு உள்ளதாக Craigslist என்னும் விளம்பர நிறுவன இணையதளத்தில் விளம்பரம் தரப்பட்டது.
மாத வாடகை £650 எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
குறித்த விளம்பரத்தில், மாத வாடகைக்கு பதிலாக மாற்று வழியில் கூட கட்டணத்தை செலுத்தலாம் என வீட்டு உரிமையாளர் குறிப்பிட்டிருந்தார்.
இது குறித்து அறிய நினைத்த ITV Wales என்னும் தனியார் தொலைக்காட்சி சேனல், தங்களின் ஊழியரான சியோன் என்ற இளம் பெண்ணை அந்த வீட்டு உரிமையாளரிடம் அனுப்பியது.

சியோன் தனக்கு வீடு வாடகைக்கு வேண்டும் என கூறி உரிமையாளரை சந்திக்க சென்றார்.
அவரிடம் பேசிய உரிமையாளர், நீங்கள் வாரத்துக்கு ஒருமுறை என்னுடன் உறவு கொண்டால் வீட்டு வாடகை தரவேண்டாம் என கூறியுள்ளார்.
இதை ஒரு உதவியாகவே செய்கிறேன் எனவும் உரிமையாளர் கூறியுள்ளார். உரிமையாளர் பேசியது அனைத்தும் அங்கிருந்த ரகசிய கமெராவில் பதிவு செய்யப்பட்டது.
பின்னர் தனது அலுவலகத்துக்கு வந்த சியோன், அவர் பேசியது அனைத்தும் பதிவு செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, அந்த வீடியோவை வெளியிட்டு தன்னை ஒரு கொடூரமானவனாக வெளியுலகுக்கு காட்ட வேண்டாம் என உரிமையாளர் கெஞ்சியுள்ளார்.
பொதுவாக வாடகைக்கு பதிலாக இது போன்ற மாற்று வழி உள்ளது என விளம்பரம் தருவது பிரித்தானியாவில் சட்டமீறல் கிடையாது.
ஆனால், ஒருவரை கட்டாயப்படுத்தி அவரை பாலியல் தொழிலாளி போல மாற்ற முயன்றால் அது சட்டபடி குற்றமாகும்.
YouGov என்ற சந்தை ஆராய்ச்சி நிறுவனம் சமீபத்தில் நடத்திய ஆய்வில் உறவுக்கு ஒத்துக்கொண்டால் வாடகை தர தேவையில்லை அல்லது வாடகை குறைக்கப்படும் என வீட்டு உரிமையாளர்கள் தங்களிடம் கூறியதாக நாட்டின் 2,50,000 பெண்கள் கூறியுள்ளார்கள்.
கடந்தாண்டு மட்டும் வாடகை வீடு தேடி சென்ற 190,000 பெண்களுக்கு இது போன்ற அனுபவம் வீட்டு உரிமையாளர்களால் கிடைத்துள்ளதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.