கூகுள் நிறுவனத்தை அடிபணிய வைத்த தமிழ் கூகுளில் இனி தமிழில் எழுதி சம்பாதிக்க முடியும்

mgid start
கூகுள் நிறுவனத்தை அடிபணிய வைத்த தமிழ் மொழி

கூகுள் நிறுவனத்தின் ஆட்சென்ஸ்(AdSense) மூலமாக பலர் blog எழுதி அதன் மூலமாக சம்பாதித்து வருகிறார்கள் இதுவரை ஆங்கிலத்தில் எழுதினால் மட்டுமே அவர்கள் அதற்க்கு விளம்பரங்களை தந்து கொண்டு இருந்தனர் இந்த நிலையில் நேற்று கூகுள் ஒரு அறிவிப்பை வெளிவிட்டது அதில் இனி தமிழ் மொழியில் எழுதினாலும் ஆட்சென்ஸ் (AdSense) மூலமாக விளம்பரங்கள் பெற்று சம்பாதிக்கலாம் என்பது தான் அந்த அறிவிப்பு.

ஆட்சென்ஸ் (AdSense) என்றால் என்ன?

ஆட்சென்ஸ் (AdSense) என்பது ஒரு விளம்பர நிறுவனம் இது பல நிறுவனங்களில் இருந்து விளம்பரங்கள் பெற்று அவற்றை கூகிள் மூலமாக விளம்பரம் செய்கிறார்கள் 

நாம் எழுதும் blog மற்றும் இணையதளங்களில் இந்த விளம்பரங்கள் கூகிள் மூலம் ஒளிபரப்பப்படும் நமது இணையதளத்துக்கு வரும் நண்பர்கள் அந்த விளம்பரங்களை கிளிக் செய்வதால் ஒரு தொகை கூகிள் நிறுவனத்துக்கு கிடைக்கும் 

அப்படி நம் மூலமாக அவர்களுக்கு கிடைக்கும் தொகையில் ஒரு பகுதியை அவர்கள் நமக்கு கொடுக்கிறார்கள் இதன் மூலமாக பல இணையதள எழுத்தாளர்கள் வருமானம் பெற்று வருகிறார்கள்

இது நாள் வரை ஆங்கிலம் மற்றும் இந்திய மொழிகளில் ஹிந்தி மொழிகளில் எழுதும் இணையதளங்களுக்கு மட்டுமே இந்த ஆட்சென்ஸ் (AdSense) நிறுவனம் விளம்பரங்கள் ஒளிபரப்ப அனுமதி வழங்கி வந்தது இந்த நிலையில் நேற்று தமிழ் மொழியையும் ஆட்சென்ஸ் (AdSense) நிறுவனம் அங்கீகரித்தால் தமிழி இணையத்தளம் எழுதும் நண்பர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளார்கள்.

மேலும் இந்த அறிவிப்பால் தமிழ் மொழி இணைய உலகில் மேலும் ஒரு படி பல மடங்கு வளர்ச்சி பெரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஆட்சென்ஸ் (AdSense) அனுமதி பெற விதிமுறைகள்

இதுவரை ஆட்சென்ஸ் (AdSense) விளம்பரம் பெறுவதற்கு எந்த விதிமுறை இருந்ததோ அதே  விதிமுறைகள் தமிழ் மொழிக்கும் பொருந்தும் 

நீங்கள் எழுதும் கருத்துக்கள் உங்களின் சொந்த கருத்தாக இருக்க வேணும் மேலும் வேறு எந்த இணையதளத்திலும் இருந்து கருத்துக்களை எடுத்து உங்களது இணையத்தில் போட்டால் உங்களுக்கு ஆட்சென்ஸ் (AdSense) அனுமதி வழங்காது 

மேலும் நீங்கள் குறைந்தது ஆறு மாதங்களாவது உங்களின் இணையதளத்தை நடத்திக்கொண்டு இருக்க வேண்டும் 

உங்களின் இணையத்தில் ஆபாச படங்கள் ஆபாச கருத்துக்கள் எதுவும் இடம் பெறகூடாது அப்படி நீங்க போட்டால் உங்களின் ஆட்சென்ஸ் (AdSense) அனுமதி ரத்து செய்து விடுவார்கள் 

மேலும் தகவல்களுக்கு ஆட்சென்ஸ் (AdSense) தளத்தில் உள்ள விரிவான தகவல்களை படித்து பார்த்து அதன்படி செயல் பட்டால் நீங்களும் கண்டிப்பாக ஆட்சென்ஸ் (AdSense) மூலமாக அதிக வருமானம் பெறலாம்.