"தைரியம் இருந்தா கதவ ஒடச்சுட்டு உள்ள வாடா..." தமிழ் மண்ணின் வீரத்தை அமெரிக்காவில் நிலைநாட்டிய தமிழச்சி..!!

mgid start
துப்பாக்கி சூடு நடந்த பொழுது ஒரு வகுப்பில் உள்ள அத்தனை மாணவர்களையும் காப்பாற்றி அமெரிக்க மக்களால் வியந்து பார்க்கப்படுகிறார் தமிழ் பெண் ஒருவர்.

அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் உள்ள பள்ளி ஒன்றில் கடந்த சில தினங்களுக்கு  முன்பு துப்பாக்கி சூடு நடந்தது.

புளோரிடா மாகாணத்தின் பார்க்லேண்ட் பகுதியில் உள்ள ஸ்டோன்மேன் டக்லஸ் என்ற பள்ளியில் துப்பாக்கியுடன் நுழைந்த முன்னாள் மாணவர் கொத்துக்கொத்தாக மாணவர்களை கொல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் முதலில்  தீ அபாய மணியை ஒலிக்கச் செய்துள்ளார்.

அப்போது வகுப்பறையை விட்டு வெளியே சிதறி ஓடிய மாணவ, மாணவிகளை கண்மூடித்தனமாக சுட்டுத்தள்ள ஆரம்பித்தான்.

இதில் கிட்டத்தட்ட 17 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் நடந்த பொழுது அந்த பள்ளியில் பணிபுரித்து வந்த கணித ஆசிரியையான சாந்தி விஸ்வநாதன், மாணவர்களுக்கு அபாகஸ் வகுப்பு எடுத்துக் கொண்டிருக்கிறார்.

இரண்டு முறை அபாய மணி ஒலித்த பொழுதே ஏதோ விபரீதம் நடக்கிறது என்பதை உணர்ந்து கொண்ட அவர். வகுப்பறையை இழுத்து மூடி இருக்கிறார்.

பின்னர் உள்ளே இருப்பது தெரியாத வண்ணம் ஜன்னல்களை பேப்பர் கொண்டு அடைத்துள்ளார்.

இறுதியாக காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட மாணவனை கைது செய்த பிறகும் அவர் கதவை திறக்கவில்லை.

துப்பாக்கிச் சூடு நடத்திய மாணவன் தான் பாதுகாப்பு படையினர் போல் பேசுவதாக எண்ணிய சாந்தி, "முடிந்தால் கதவை உடையுங்கள். இல்லாவிட்டால் சாவியை எடுத்து வந்து கதவை திறந்து கொள்ளுங்கள்" என கூறி உள்ளார்.

இறுதியாக பாதுகாப்பு படையினர் உண்மை நிலையை எடுத்துரைத்து கதவை திறக்க வைத்தனர்.

இக்கட்டான நிலையிலும் குழந்தைகளின் உயிர் ஒன்றே முக்கியம் என்று உணர்ந்து சாதுர்யமாக செயல்பட்ட சாந்தி விஸ்வநாதனுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.