மன்னித்து விடுங்கள் அம்மா: தற்கொலைக்கு முன் சிறுமியின் உருக்கமான கடிதம்

mgid start
ஹைதராபாத் பள்ளி மாணவியால் பள்ளிக்கட்டணம் செலுத்த முடியாமல் போன நிலையில் அவமானம் தாங்காமல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மல்கஞ்கிரி பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு படித்து வந்தவர் சாய் தீப்தி (14)
தீப்தியின் பெற்றோர் 2,000 ரூபாய் கல்வி கட்டணத்தை செலுத்தாததால் அவரை தெரிவு எழுத பள்ளி நிர்வாகம் அனுமதிக்கவில்லை.
மேலும் வகுப்பிலிருந்து ஆசிரியர்களால் சக தோழிகள் முன் தீப்தி வெளியேற்றப்பட்டுள்ளார்.
இதையடுத்து பள்ளியிலிருந்து வீட்டுக்கு வந்த தீப்தி தனது தங்கையிடம் பள்ளியில் தனக்கு நேர்ந்த அவமானத்தை சொல்லி அழுதுள்ளார்.
இதையடுத்து நேற்று தனது வீட்டில் தீப்தி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து பொலிசாருக்கு தகவல் தரப்பட்ட நிலையில் மாணவியின் சடலம் அருகில் கடிதம் ஒன்றை அவர்கள் கைப்பற்றினார்கள்.
அதில், என்னை மன்னித்து விடுங்கள் அம்மா, பள்ளியில் கட்டணம் செலுத்தாததால் என்னை தெரிவு எழுத அனுமதிக்கவில்லை என எழுதப்பட்டிருந்தது.
சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.