விஜய் - அஜித் இருவரையும் வைத்து படம் எடுக்கத்தயார் - மோகன்ராஜா

mgid start
தனி ஒருவன்’ படத்திற்கு பிறகு தமிழின் முக்கியமான இயக்குநர்களில் மாறியிருப்பவர் மோகன் ராஜா. அதற்கு அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிப்பில் அவர் இயற்றிய ‘வேலைக்காரன்’ படமும் நல்ல கவனம் பெற்றது. இதனையடுத்து, நடிகர் விஜயைச் சந்தித்து அவர் பேசினார். இதனால், அடுத்ததாக விஜயை வைத்து அவர் படம் இயக்கப் போகிறார் என்று தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், தன்னுடைய அடுத்த படம் குறித்து மோகன் ராஜா கருத்து சொல்லியுள்ளார்.

விஜய் அஜித் இருவரையும் இணைத்து படம் இயக்க தயாராக உள்ளதாக இயக்குநர் மோகன் ராஜா தெரிவித்துள்ளார். இதற்கான கதை தயாராக இருப்பதாகவும், அதற்காக இருவரிடமும் பேச்சு வார்த்தை நடத்த தயாராக உள்ளதாகவும் மோகன் ராஜா தெரிவித்துள்ளார்.