நடிகர் விஜய்யின் மகள் திவ்யா எப்படியிருக்கிறார்?..

mgid start
தமிழ் சினிமாவில் முன்னனி ஹீரோவான விஜய்யின் மகள் திவ்யா தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் தெரியுமா?...
இளையதளபதி விஜய்க்கும், சங்கீதாவிற்கும் 1999ம் ஆண்டு திருமணமானது. அதன்பின்பு 2000ம் ஆண்டில் சஞ்சய் என்ற மகனும், 2005ல் திவ்யா என்ற மகளும் பிறந்தனர்.
12 வயதாகும் விஜய்யின் மகள் திவ்யா சென்னையில் சாலிகிராமத்தில் உள்ள ஒரு பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறார்.
அப்பா செல்லமாக இருக்கும் திவ்யா அப்பாவைப் போன்றே அமைதியாகத் தான் இருப்பாராம். மேலும் படிப்பிலும், விளையாட்டிலும் எப்பொழுதும் முதலிடத்தில் தான் இருப்பாராம். செஸ் விளையாட்டில் தங்கப் பதக்கமும் பெற்றுள்ளார்.
படிப்பு, விளையாட்டு மட்டுமின்றி நன்றாக பாடும் திறமை கொண்ட திவ்யா பல போட்டிகளில் கலந்து பரிசுகளை வாங்கியுள்ளாராம்.

தனது அப்பாவுடன் நேரத்தினை செலவிடுவது மட்டுமின்றி வெளியிடங்களுக்குச் செல்லும் போதும் விஜய்யுடன் தான் செல்வாராம். விஜய்யின் தெறி படத்தில் முடிவுக்காட்சியில் மகளாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.