கதறிய போது எல்லோரும் தூங்குவது போல் நடித்தார்கள்: சனுஷா உருக்கம்!

mgid start
ஓடும் ரயிலில் நடிகை சனுஷாவுக்குப் பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது செய்யப்பட்டார்.
நடிகை சனுஷா, ரேணிகுண்டா, அலெக்ஸ் பாண்டியன், கொடிவீரன் உள்ளிட்ட பலபடங்களில் நடித்துள்ளார். இவர் நேற்று இரவு திருவனந்தபுரம் விரைவு ரயிலில் பயணித்த போது தூங்கியுள்ளார். அப்போது தூக்கத்தில் இருந்த அவருக்கு, அதே பெட்டியில் பயணித்த ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதையறிந்து கண் விழித்த சனுஷா உடனே அவரது கையை பிடித்து கூச்சலிட்டு கதறியுள்ளார். ஆனால் தான் கூச்சலிடும் போது யாரும் உதவிக்கு வரவில்லை என்றும், எல்லோரும் தூங்குவது போல் நடித்தார்கள் என்றும் சனுஷா வேதனை தெரிவித்துள்ளார். 

இதையடுத்து தகவலறிந்து வந்த ரயில்வே போலீஸாரிடம் அவர் புகார் அளித்துள்ளார். பின்னர் புகாரின் அடிப்படையில் பாலியல் தொல்லை கொடுத்த ஆண்டோ போஸ் என்பவரை கைது செய்தனர்.