கைவிட்ட காதலன் வீட்டின் முன் இளம் பெண் மது அருந்தி நடனம்

mgid start


காதலனால் கைவிடப்பட்ட இளம்பெண் காதலனின் வீட்டின் முன் மது அருந்திவிட்டு நடனமாடிய காட்சிகள் இணையதளத்தில் பரவிவருகின்றன. பட்டவ்டி ((Pataudi)) நகரைச் சேர்ந்த இந்த இளம் பெண்ணை அவரது காதலன் ஏமாற்றி விட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த இளம்பெண் மது அருந்திவிட்டு தன்னை பலர் வேடிக்கை பார்ப்பதையும் மறந்தும் அது குறித்த கவலையின்றியும் காதலன் வீட்டு முன் சென்று நடனமாடினார்.
அமீர் கான் நடித்த ராஜா இந்துஸ்தானி திரைப்படப் பாடலுக்கு இளம்பெண் நடனமாடிய காட்சிகளை அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் செல்ஃபோன்களில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான 4 வீடியோ காட்சிகள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன.